Latest Job Vacancies Updates..!

How to make money blogging in Tamil - Part 1

Learn how to make money blogging in Tamil! Discover effective strategies and monetization methods. Start make money as a blog writer today.
Lanka Career
How to make money blogging in Tamil - Part 1

How to make money as a blog writer ?

உங்கள் அனைவரையும் ஒரு புதிய ஆக்கத்தின் ஊடக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. நாம் இந்த புதிய தொடரில் இணையத்தினைப் பயன்படுத்தி எவ்வாறு பணத்தினை சம்பாதிப்பது? இவ்வாறு பணத்தினை சம்பாதிப்பது சாத்தியமா? என பல்வேறு உண்மைத்தன்மைகளை இந்த பதிப்பின் ஊடக வெளிச்சத்திற்கு கொண்டு வர உள்ளோம்.

இன்று நாம் எந்த ஒரு சமூக வலைத்தளத்தினை எடுத்தாலும் அதில் எந்த ஒரு இடத்திலாவது Online money earning, Work from home, Online Trading என பல பல ஆசை வார்த்தைகளால் நிரம்பிய விளம்பரங்களை பார்க்காமல் இருப்பதே கிடையாது. சிலர் அதனை நம்பி ஏமாந்து போவதும் உண்டு சிலர் அதில் கொடீஸ்வரர்களாவதும் உண்டு.

இவ்வாறு ஆன்லைன் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க பல வழிகள் காணப்படுகின்றன. அவற்றில் மிகவும் நம்பிகையான உங்களுடைய சுய உழைப்பு திறமையினை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க கூடிய ஒரு முறைமையே இந்த பதிப்பின் ஊடக நாம் முழுமையாக பார்க்க உள்ளோம். Blogging மூலமாக எவ்வாறு பணம் சம்பாதிப்பது? இதற்கு என்ன செய்ய வேண்டும்? என ஆரம்பம் முதல் முழுமையாக பார்க்கலாம்.

அறிமுகம் : Blogging என்றால் என்ன

How to make money blogging in Tamil - Part 1

Blogging என்பது எமக்கு பிடித்த ஒரு விடயத்தை, அல்லது என்ன விடயத்தில் நமக்கு ஆர்வம் உள்ளதோ அல்லது தெளிவு உள்ளதோ அதனை ஆக்கமாக வடிவமைத்து இணையத்தளத்தில் வெளியிடுவதாகும். இதன் மூலம் நாம் பெற்ற அறிவினை பிறர்க்கு பகிர்ந்து அதன் மூலம் பணம் சம்பாதிக்க கூடிய வழியினை இந்த Blogging எமக்கும் வழங்குகின்றது.

Blogging யில் தனிப்பட்ட அனுபவங்கள், பொழுதுபோக்குகள், தொழில்நுட்பம், செய்திகள், கற்றல் நடவடிக்கை, பயணங்கள், வணிகம், உணவு, Fashion போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கி ஆக்கங்களை உருவாக்கும் முறை Blogging ஆகும்.

முன்னைய காலத்தில் ஒரு Blog உருவாக்க வேண்டுமாக இருந்தால் அவர்கள் இணைய வடிவமைப்பு (Web Development) கற்று இருக்க வேண்டும். Html, Java, Css போன்ற பல்வேறு துறைகளின் அறிவு காணப்பட வேண்டும். அனால் இப்போது அனைத்துமே இலகுவாக்கப்பட்டு சாதாரண Facebook Post போடும் அளவுக்கு அறிவு இருந்தால் போதும் உங்களாலும் ஒரு Blog இணை உருவாக்க முடியும் என்ற நிலைமைக்கு வந்து விட்டது.

இவ்வாறு இலகுவாக்கப்பட்ட Blogging வசதியினை பல்வேறு பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் இலவசமாகவே வழங்குகின்றன. அவற்றில் எந்த ஒரு அடிப்படை அறிவும் இன்றி சாதாரண கணணி அறிவினை பயன்படுத்தி நீங்களும் Blog ஒன்றினை உருவாக்க முடியும்.

Blogging சேவையினை வழங்கும் நிறுவனங்கள்.

How to make money blogging in Tamil - Part 1
  1. Wordpress
  2. Blogger
  3. Tumblr
  4. Medium
  5. Linkedin
  6. Wix
  7. HubSpot
  8. Squarespace

Blogging மூலம் பணம் சம்பாதிக்க முடியுமா?

ஆம், இதற்கு பல்வேறு வழிகள் காணப்படுகின்றன. அதற்கான வழிமுறைகளை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும். Blog யில் 90% ஆனா வருமானம் விளம்பரம் மூலமாகவே பெறப்படுகின்றது.

How to make money blogging in Tamil - Part 1

என்ன வழிகளில் பணம் சம்பாதிக்க முடியும் ?

கீழே காணப்படும் முறைகள் மூலம் Blogging யில் பணம் சம்பாதிக்க முடியும்.

  1. விளம்பரம் : உங்களுடைய Blog யில் பிரசித்தி பெற்ற விளம்பர நிறுவனங்களின் (Google Adsense, Ezoic, Adsterra, Adversal) விளம்பரங்களை காண்பிப்பதால் அதற்கான வருமானத்தினை Blog யின் உரிமையாளருக்கு அந்த நிறுவனம் வழங்குகின்றது.
  2. Sponsored பதிவுகள் : சில நிறுவனங்களின் பொருட்கள் சேவைகளை பற்றி உங்களுடைய Blog யில் பதிவாக இடுகை இடுவதன் மூலம் அதற்கான பெறுமதியை அந்த நிறுவனம் வழங்குகின்றது.
  3. Affiliate சந்தைப்படுத்தல் : Blog யில் ஆன்லைன் தயாரிப்புகள் அல்லது சேவைகளை விளம்பரப்படுத்தலாம். வாசகர்கள் இந்த இணைப்புகளைக் கிளிக் செய்து வாங்கும் போது அதில் இருந்து குறிப்பிட தொகையினை Blog உரிமையாளர் Commission ஆக பெறுகிறார். Amazon Associates, ShareASale மற்றும் Commission Junction ஆகியவை பிரபலமான துணைத் திட்டங்களில் அடங்கும்.
  4. Digital தயாரிப்புகள் : உங்களுடைய சொந்த தயாரிப்புக்கள் அல்லது சேவைகளை இணையத்தளத்தின் மூலம் விற்பனை செய்ய முடியும். இதன் மூலம் பொருட்களை பறந்து பட்ட சந்தையில் அறிமுகப்படுத்தி விற்பனை வருமானத்தை இரட்டிப்பார்க்க முடியும்.
  5. சந்தா வருமானம் : உங்களுடைய Blog யிற்கு வருகின்ற தொடர்ச்சியான வாசகர்களிடம் சந்தா அறவிடுவதன் மூலம் சாந்த வருமானத்தினை ஈட்டிக்கொள்ள முடியும்.

பணம் சம்பாதிக்க எவ்வளவு காலம் எடுக்கும் ?

வெற்றிகரமான மற்றும் இலாபகரமான Blog ஒன்றினை உருவாக்குவதற்கு நேரம், முயற்சி மற்றும் நிலைத்தன்மை தேவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இது ஒரே இரவில் நடக்கும் செயல் அல்ல, மேலும் பணமாக்குதல் முறைகள் முக்கிய இடம், இலக்கு பார்வையாளர்கள் மற்றும் தனிப்பட்ட பதிவரின் இலக்குகள் மற்றும் விருப்பங்களைப் பொறுத்து மாறுபடலாம்.

முதலில் பலமான ஒரு அத்திவாரத்தினை உருவாக்குவதன் மூலம் பிற்காலத்தில் அதிக வருமானம் பெற்றுக்கொள்ள கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது. பொறுமையோடு ஆரம்பிக்கும் போது குறைந்தது 3-6 மாத காலத்திற்கு இடையில் நீங்கள் Blogging யில் பணம் சம்பாதிக்கக்கூடிய நிலைக்கு வந்து விடுவீர்கள்.

எவ்வளவு பணத்தினை சம்பாதிக்க முடியும் ?

இந்த கேள்வி ஒவ்வொருவரது மனதிலும் கண்டிப்பாக எழும். தன்னால் இந்த Blogging துறையில் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்று.

இந்த Blogging இனை நீங்கள் விரும்பி செய்வீர்களா இருந்தால் உங்களுடைய பிரதான வருமானம் பெரும் துரியம இதனை மாற்றிக்கொள்ள முடியும்.

சம்பாதிக்கும் பணத்தின் அளவு ஆரம்பிற்கும் Blogging இணை பொறுத்து அவர்கள் பெறுமதியும் வேறுபடும். ஆரம்பத்தில் உங்களுக்கு வருமானம் வர ஆரம்பிற்கும் போது சிறிய தொகையிலேயே தொடங்கும். அதுவே தொடர்ந்து செயல்படும் போது பெரும் தொகை பணத்தினை வருமானமாக பெறுவீர்கள்.

உதாரணமாக ஆயிரத்தில் தொடங்கிய மாத வருமானம் பின்னர் லட்சத்தில் செல்வதை உணர்வீர்கள்

பணத்தினை எவ்வாறு பெற்றுக்கொள்வது ?

இவ்வாறு பெற்றுக்கொள்ள கூடிய வருமானங்கள் நேரடி வங்கி வைப்புக்கலாகவோ அல்லது Cryptocurrency, Paypal, Payoneer, Western Union, Binance போன்ற பல்வேறான online மூலமாகவோ கிடைக்கக் கூடியதாக இருக்கும்.

Blogging ஒன்றினை எவ்வாறு ஆரம்பிப்பது?

How to make money blogging in Tamil - Part 1

Blogging ஒன்றை ஆரம்பிற்க நீங்கள் எண்ணினால் அதற்கு நாங்கள் முன்மொழியும் சிறந்த தளங்கள் இரண்டு காணப்படுகின்றன. இவை இரண்டும் ஒரே சேவையினை வழங்கினாலும் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகின்றன.

  1. Blogger : Google நிறுவனமானது இந்த Blogger சேவையினை இலவசமாகவே வழங்குகின்றது. நீங்கள் எந்த ஒரு கட்டணமும் இன்றியே இந்த சேவையினை எவ்வளவு காலத்திற்கும் பயன்படுத்த முடியும். இதுவே Blogger யின் ஒரு தனித்துவா தன்மை ஆகும். இதற்காக Google நிறுவனம் .blogspot என்ற Domain இணை இலவசமாக வழங்குகின்றது.
  2. Wordpress : இது இணையத்தில் காணப்படுகின்ற ஒரு Open Source ஆகும். இதில் நாம் Blogging ஒன்றினை ஆரம்பிற்கும் போது Domain மற்றும் Hosting இற்கான பணத்தினை செலுத்தக் கூடியதாகவே காணப்படும். மற்றும் குறைந்த அளவிலான Html,css, java script பற்றிய தெளிவும் தேவைப்படும்.

Conclusion - முடிவுரை

ஆகவே இந்த பதிப்பானது Blog என்றால் என்ன, Blog சேவையினை வழங்கும் நிறுவனங்கள் எவை, எவ்வாறு Blogging மூலமாக பணத்தினை சம்பாதிக்க முடியும், எவ்வாறு அந்த பணத்தினை பெற்றுக்கொள்வது, Blogger, Wordpress போன்ற பல்வேறு விடயங்கள் பற்றிய தெளிவினை பெற்று இருப்பீர்கள் என நம்புகின்றோம்.

இந்த முதலாவது பகுதியில் Blogging பற்றிய போதிய விளக்கத்தினை பெற்று இருப்பீர்கள். இதனது தொடர்ச்சியான இரண்டாவது பகுதியில் Blogging ஒன்றினை ஆரம்பிக்க முன் கவனிக்க வேண்டிய முக்கிய வியங்களை பற்றிப் பார்க்கலாம்.

Well done!

இந்த பதிப்பின் தொடர்சிகள் எமது இணையப்பக்கத்தில் தொடர்ந்து பதிவேற்றப்படும். இதனை தொடர்ந்து கற்பதனால் உங்களாலும் ஒரு Blogger ஆக வீட்டில் இருந்த வண்ணம் சம்பாதிக்கும் வாய்ப்பினை பெற முடியும். நீங்கள் செய்ய வேண்டியது எமது Google News/ WhatsApp Channel பக்கத்தினை தொடர்வதன் மூலம் தொடர்ந்து எமது update களை பெற முடியும்.


Follow என்பதனை Click செய்து எம்மை தொடரவும்.

How to make money blogging in Tamil - Part 1
Lanka Career
Hi...! I am Azam Mohamed. I'm the author of Lanka Career website. If you contact us please send to message from Support Center.
Comments